கலகலப்பு-2 படத்துக்கு கடும்போட்டி.

சுந்தர்.சி.இயக்கி, தயாரிக்க, ஜெய், ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா நடிக்கும் படம் ‘கலகலப்பு-2’. பொங்கல் வெளியீடாக கலகலப்பு – 2 படத்தை திரைக்குக் கொண்டு வருவதற்கு கடும் முயற்சி செய்தார் சுந்தர்.சி.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை முடித்து சென்சாருக்கு படத்தை அனுப்பி வைத்தார். சென்சாரில் புதிய வழிகாட்டுதலின்படி செயல்பட்டதால் சர்ட்டிபிகேட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. எனவே படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துவிட்டார் சுந்தர்.சி. இதனால் இப்படம் பிப்ரவரி மாதம் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சென்சார் முடிந்ததும் கலகலப்பு – 2 படத்தை இம்மாதம் 26-ஆம் தேதி வெளியிட சுந்தர்.சி.முடிவு செய்துள்ளாராம். அதே தினத்தில் ‘ஜெயம்’ ரவியின் ‘டிக் டிக் டிக்’, உதயநிதி ஸ்டாலினின் ‘நிமிர்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அதோடு, அனுஷ்கா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தெலுங்கு டப்பிங் படமான ‘பாகமதி’ யும் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதனால் கலகலப்பு-2 படத்துக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்