வீட்டில் சடலமாக கிடந்த பெண்.. வேனில் அடிப்பட்ட நண்பர்

வீட்டில் சடலமாக கிடந்த பெண்.. வேனில் அடிப்பட்ட நண்பர்

பிரித்தானியாவில் பெண்ணொருவர் வீட்டில் சடலமாக கிடந்த நிலையில், அதற்கு சில மணி நேரம் முன்பாக பெண்ணுக்கு தெரிந்தவர் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

நாட்டின் ஹிரிபோர்ட் நகரில் உள்ள பங்களா வீட்டில் 50-களில் உள்ள பெண்ணொருவர் சடலமாக கிடந்தார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள்.

பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்ட நான்கு மணி நேரத்துக்கு முன்னர் அவருக்கு தெரிந்த 40 வயதான நபர் மீது சாலையில் வேன் மோதியுள்ளது.

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரியவந்துள்ளது.

இரண்டு சம்பவங்களும் எப்படி மற்றும் ஏன் நடைபெற்றது என தெரியாத நிலையில் பொலிசார் தங்கள் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கும், அடிப்பட்ட நபருக்கும் என்ன உறவுமுறை என தெரியவில்லை.

சம்பவம் குறித்த தகவல் யாருக்கேனும் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்