ஆயிரத்து 200 கோடி ரூபாவை முடக்கியது மத்திய வங்கி

ஆயிரத்து 200 கோடி ரூபாவை முடக்கியது மத்திய வங்கி

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புபட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரெஷரிஸ் (Perpaccuval Treasuries) நிறுவனத்தின் பண வைப்புக்களில் ஆயிரத்து 200 கோடி ரூபாவை மத்திய வங்கி முடக்கி வைத்துள்ளதாக, அமைச்சரவை துணைப் பேச்சாளரும் சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று(10.01.2018) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

இதனால் ஆயிரத்து 100 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக கூற முடியாது என்று தெரிவித்த அமைச்சர், பிணைமுறி மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு, பிணைமுறி பேரங்கள் பற்றிய நிபுணத்துவ அறிவு இருக்கவில்லை. இது பற்றிய தெளிவுள்ள வெளிநாட்டு நிபுணர்களின் கருத்தையேனும் ஆணைக்குழு விசாரித்திருக்க வேண்டுமென்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் கூறினார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்