தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு பெயரைப் பயன்படுத்துவதற்குத் தடை

தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு பெயரைப் பயன்படுத்துவதற்குத் தடை
உதய சூரியன் சின்னத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது கட்சியின் பெயரை தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்று பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும், கட்சிகளின் செயலர்களுக்கும் இடையே நேற்று சந்திப்பு இடம்பெற்றது.
“உதய சூரியன் சின்னத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் தரப்பினர், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்தி வருகின்றனர். இது எமது கட்சியின் பெயரை ஒத்ததாக உள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதை ஆராய்ந்த தேர்தல்கள் ஆணைக்குழு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
தேர்தல் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய முத்திரையைப் பயன்படுத்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்கும் தேர்இதல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.
…………..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்