விக்ரம் படத்தில் பீமனாக ஹாலிவுட் நடிகர்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் விக்ரம் நடிப்பில் ‘மஹாவீர் கர்ணா’ என்கிற படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கவுள்ள இந்தப்படத்தில் கர்ணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார். பீமன் கேரக்டரில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்த தகவல் மலையாள ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்துள்ளது. காரணம் கடந்த வருடம் தான் மோகன்லால் நடிப்பதாக ‘மகாபாரதம்’ என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது ஞாபகம் இருக்கலாம்.

இந்தப்படமே பீமன் கேரக்டரை மையப்படுத்தியது தான்.. அதில் மோகன்லால் தான் பீமன் கேரக்டரில் நடிக்க இருக்கிறார். அதனால் ஹாலிவுட்டில் இருந்து நடிகர் ஒருவர் விக்ரம் படத்தில் பீமனாக நடிக்க இருக்கிறார் என்றால் அது ஆச்சர்யமான விஷயம் தான்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்