தங்களை கருணை கொலை செய்து விடுமாறு வயதான தம்பதி ஜனாதிபதிக்கு கடிதம்

தங்களை கருணை கொலை செய்து விடுமாறு வயதான தம்பதி ஜனாதிபதிக்கு கடிதம்

இந்தியாவில், வாழ விரும்பாததால் தங்களை கருணை கொலை செய்து விடுமாறு வயதான தம்பதி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பது நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

மும்பை நகரில் வசித்து வருபவர் நாராயன் லவடே (88) இவரின் மனைவி இரவாடி (78) இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் உடன் பிறந்தவர்களும் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தம்பதி ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், எங்களால் இந்த சமூகத்துக்கு எந்த உபயோகமும் இல்லை. நாங்கள் உயிருடன் இருப்பதால் நாட்டின் வளங்கள் வீணாகிறது.

இதனால் எங்களை கருணை கொலை செய்திடுங்கள். எங்களுக்கு எந்தவித தீவிரமான நோயும் கிடையாது, மாடியிலிருந்து கீழே குதித்தோ அல்லது தூக்கு மாட்டியோ தற்கொலை செய்யலாம் என நினைத்தோம்.

ஆனால் அப்படி செய்வதால் கண்டிப்பாக உயிர் போகும் என சொல்ல முடியாது என்பதால் செய்யவில்லை.

Dignitas என்னும் பெயரில் சுவிஸில் செயல்படும் நிறுவனம் வாழ விரும்பாதவர்களை கருணை கொலை செய்கிறது.

ஆனால் எங்களிடம் பாஸ்போர்ட் இல்லாததால் அங்கு செல்ல முடியவில்லை. இறந்த பின்னர் எங்கள் உடலை தானம் செய்ய ஏற்கனவே உறுதியளித்துள்ளோம்.

எங்களின் சிறிய அளவிலான சொத்துக்களை அரசின் கருவூலத்தில் சேர்க்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்