ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க சங்கக்கார முயற்சி

கிரிக்கெட் விளையாடும் பிரதான நாடுகள் ஒன்றிணைந்தால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க முடியும் என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.


மெல்போன் கிரிக்கெட் குழு உறுப்பினர்களின் தலைமையில் அவுஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே குமார் சங்கக்கார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விழாவில் கிரிக்கெட் இணைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் தாம் இருப்பதாகவும், அவ்வாறு இடம்பெறாவிட்டால் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விழாவினை இலக்காகக் கொண்டு செயற்படவுள்ளதாகவும் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்