ஒரு நாளேனும் பாடசாலைக்கு செல்லாத 1,523 பேர் சிறைச்சாலைகளில்

ஒரு நாளேனும் பாடசாலைக்கு செல்லாத 1,523 பேர் சிறைச்சாலைகளில்

ஒரு நாளேனும் பாடசாலைக்கு செல்லாத 1,523 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், தரம் ஐந்து வரையில் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த 6,879 பேரும், தரம் எட்டு வரையில் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த 6,129 பேரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த 2,643 பேரும், உயர்தரத்தில் சித்தியடைந்த 909 பேரும் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறைச்சாலைகளில் 55 பட்டதாரிகளும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெலிக்கடை, போகம்பரை, மஹர உள்ளிட்ட 25 சிறைச்சாலைகளில் 24,060 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்