மனைவி குளிக்காததால் விவாகரத்து கோரிய கணவன்

மனைவி குளிக்காததால் விவாகரத்து கோரிய கணவன்

தாய்வான் நாட்டில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மனைவி குளிப்பதாக கூறி நபர் ஒருவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்வானில் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களின் திருமண வாழ்க்கையில் மனைவியின் நடத்தையால் பிளவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பெண்ணின் கணவர் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு வரை வாரத்திற்கு ஒரு முறையாவது குளித்து விடும் மனைவி, நாளடைவில் வருடம் முழுக்க குளிக்காமல் கொடுமை செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பல் விலக்குவதில் கூட சோம்பேறித்தனத்தை காட்டியுள்ள குறித்த பெண், அவரது கணவரை வேலைக்கு செல்லவிடாமல் கொடுமைப்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

குடும்ப செலவிற்காக மாமியாரிடம் பணம் பெறுவதை விரும்பாத அந்த நபர் கடந்த 2015-ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு வந்தும் அந்த நபருக்கு தொல்லை கொடுத்துள்ளார் குறித்த பெண்.

இந்நிலையில் இதற்கு மேல் தன்னால் பொருத்து கொள்ள முடியாது என்றும் தனக்கு விவாகரத்து வழங்கும்படியும் குறித்த பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்