கிளிநொச்சியில் வளர்ப்பு நாய் ஒன்றின் அட்டகாசம்!

கிளிநொச்சியில் வளர்ப்பு நாய் ஒன்றின் அட்டகாசம்!

கிளிநொச்சி – தொண்டமான் நகர் கிழக்கு பகுதியில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வளர்ப்பு நாய் அவரின் வீட்டிக்கு முன்பாக செல்லும் 40க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட 100க்கு மேற்பட்ட பொதுமக்களை கடித்துள்ளது.

இதனால் மாணவர்கள் உட்பட வீதியினால் செல்லும் பொது மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே பயணம் செய்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக வேட்பாளரிடம் பல தடவைகள் பொதுமக்கள் தெரிவித்த போதிலும் கூட்டினுள் நாயினை அடைத்து வைக்காமல் திறந்து விடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்