சற்று முன் இரணைமடு சந்தியில் விபத்து: ஸ்தலத்தில் ஒருவர் பலி

சற்று முன் இரணைமடு சந்தியில் விபத்து: ஸ்தலத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சி- முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்திலே ஒருவர் பலியாகியுள்ளார்.

மாங்குளம் பகுதியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்கள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்னே சென்ற டிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தியமையால் பின்னே மணல் ஏற்றி சென்ற மற்றைய டிப்பர் பின்னால் மோதியுள்ளது.
இதன்போது வாகனத்தை செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்