புதிய வகை போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது!

புதிய வகை போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது!


ஒருவகையான புதிய போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜையொருவரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒருவகையான அரியவகை போதைப்பொருளையே குறித்த நபர் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தி வந்துள்ளார்.

இந்தியாவின் சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்திலேயே நேற்று இரவு குறித்த நபர் வந்துள்ளார்.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.

குறித்த போதைப்பொருட்களை தபால் உறையில் மறைத்த வைத்துக்கொண்டு வந்துள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 60 இலட்சம் ரூபாவெனவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த போதைப்பொருளானது கிரிஸ்டல் வகையைச் சேர்ந்ததாகவும் குறித்த போதைப்பொருளை கொழும்பிலுள்ள முன்னணி இரவு களியாட்ட விடுதிகளுக்கு விநியோகிக்கும் நோக்கில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாமென பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மினுவாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்