வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் 155 ஆவது பிறந்த தின நினைவு தினம்

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் 155 ஆவது பிறந்த தின நினைவு தினம்

வவுனியா புகையிரத நிலைய வீதிலுள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவுத் தூபியில் இன்று (12.01.2017) காலை 8.30 மணியளவில் அன்னாரின் 155ஆவது பிறந்த தின நினைவு தினம் இடம்பெற்றது.
வவுனியா ஹட்டன் நஷினல் வங்கியின் அனுசரணையில் தமிழ் விருட்சம் அமைப்பின் எற்பாட்டில் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத் தலைவர் தமிழ் மணி அகளங்கள் தலைமையில் இடம்பெற்ற நினைவு தின நிகழ்வில் சிறப்புச் செற்பொழிவினை தமிழ் மணி அகளங்கன் நிகழ்த்தினார்.

இதையடுத்து மலர் மாலை அணிவித்து, மலர் தூவி நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஹட்டன் நஷினல் வங்கியின் முகாமையாளர், உத்தியோகத்தர்கள், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர். இ. நித்தியானந்தன், மாவட்ட சமூகசேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் திரு. எஸ். .எஸ். வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு. சந்திரகுமார், செயலாளர் திரு. மாணிக்கம் ஜெகன், வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர், வவனியா வைசப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர் விக்னா, என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்