பொது சொத்துக்களை களவாடியவர்கள் தண்டிக்கப்படுவது உறுதி!

பொது சொத்துக்களை களவாடியவர்கள் தண்டிக்கப்படுவது உறுதி!

இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் பொது சொத்துக்களை திருடுவதால் நாட்டை அபிவிருத்தி அடைய செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தென்பகுதியில் நேற்று இடம்பெற்ற சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டுக்கு கிடைத்துள்ள ஜனநாயகம், சுதந்திரம், மற்றும் நீதிதுறைக்கு கிடைத்துள்ள சுயாதினதன்மை ஆகியவற்றை பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

இலங்கையை முன்னேற்ற தேவையான அனைத்து வளங்களும் காணப்பட்ட போதும், அரசியல் தலைவர்களின் ஊழலால் அதனை செய்ய முடியாதுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி நாட்டின் அதிகாரத்தை பொறுப்பெடுத்தவர்கள் பாரிய தவறுகளை புரிந்துள்ளதாகவும் கூறினார்.

குறிப்பாக மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் ஆளும் கட்சி எதிர்கட்சியை பார்த்து நீங்ளே திருடர்கள் எனவும், எதிர்க் கட்சியினர் ஆளும் கட்சியினரை பார்த்து நீங்களே திருடர்கள் எனவும் கூச்சலிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிலைமையால் மக்கள் யார் திருடர்கள் என்பதை புரிந்துக்கொள்ள முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2008 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மத்திய வங்கியில் ஆயிரம் கோடி ரூபா பணம் ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே இவ்வாறு பொது மக்களின் சொத்துக்களை களவாடியவர்கள் யாராக இருந்தாலும் தாராதரம் பாராது தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்