சிறப்பாக இடம் பெற்ற மன்னார் அல்-அஸ்ஹர்   தேசிய பாடசாலையின் மரதன் ஓட்ட போட்டி.

-மன்னார் நிருபர்-
(12-1-2018)
மன்னார் அல்-அஸ்ஹர்   தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் நிகழ்வான மரதன் ஓட்ட போட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை 6.50 மணியளவில் பாடசாலைக்கு முன் ஆரம்பமானது.
-பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் தலைமையில் குறித்த மரதன் ஓட்ட போட்டி இடம் பெற்றது.
-குறித்த போட்டியானது 12 தொடக்கம் 16 வயது பிரிவினருக்கும்,18 தொடக்கம் 20 வயது பிரிவினருக்கும் என இரு  பிரிவுகளாக இடம் பெற்றது.
-இதன் போது  12 தொடக்கம் 16 வயது பிரிவில் முதலாம் இடத்தை சம்ஸ் இல்ல மாணவன் எஸ்.சப்ரின், 2 ஆம் இடத்தை சம்ஸ் இல்ல மாணவன் எம்.ஏ.ஆத்திப்,3 ஆம் இடத்தை தாஜ் இல்ல மாணவன் எம்.ஏ.அர்ஹம் அஹமட் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
18 தொடக்கம் 20 வயது பிரிவில் 1 ஆம் இடத்தினை சிறாஜ் இல்ல மாணவன் எம்.முஜாஹீத்,2 ஆம் இடத்தினை சம்ஸ் இல்ல மாணவன் என்.எம்.அகீல் , 3 ஆம் இடத்தினை சம்ஸ் இல்ல மாணவன் ஏ.ஜெயபிரதாப் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
குறித்த மரதன் ஓட்டப் போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள்   கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்