காதலியை தேடிச் சென்ற காதலனுக்கு ஏற்பட்ட நிலை!

காதலியை தேடிச் சென்ற காதலனுக்கு ஏற்பட்ட நிலை!

அவிசாவளையில் காதலியின் வீட்டை தேடி மாற்று வழியில் சென்று கொண்டிருந்த இளைஞரை அடையாளம் தெரியாத நபரொருவர் கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காதலன் கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டப்பட்டு, காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்துள்ள நபர் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பாதுக்க பிரதேசத்தை சேர்ந்த காதலன் அவிசாவளைக்கு வாடகை முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.

இதற்கமைய, இரவு நேரம் காதலி வழங்கிய முகவரிக்கமைய மாற்று வழியில் காதலன் சென்று கொண்டிருந்த போது, யாருமற்ற வீதியில் வைத்து காதலனை அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரமாக தாக்கியுள்ளதுடன், கையடக்கத் தொலைபேசியையும் பறித்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்