தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பயணித்த வேன் விபத்து

(க.கிஷாந்தன்)

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பயணித்த வேன் விபத்து

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை பகுதியில் 12.01.2018 அன்று இரவு 7 மணியளவில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் யானை சின்னத்தில் கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பயணித்த வேன் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

அட்டன் – நுவரெலியா ஏ -7 பிரதான வீதியில் அட்டன் பகுதியிலிருந்து லிந்துலை பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்றும் பத்தனையிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேனும் பத்தனை பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், மழை பெய்ததன் காரணமாக வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்