முப்பது வருட காலங்களில் கிடைக்கப்பெறாத உரிமைகளை ஜனநாயக வழி……

முப்பது வருட காலங்களில் கிடைக்கப்பெறாத உரிமைகளை ஜனநாயக வழி நீரோடத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் மூலமாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மக்களுக்கான சேவைகளையும் எமது உரிமைகளையும் பெறுவதற்கு ஆரம்பித்துள்ளோம் என்கின்றார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா.

இன்று 12 ஆம் திகதி சம்பூர் கடற்கரைச்சேனை பிரதேசத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்……

கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் போது போராளிகளாகிய நாம் எமது வட கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கான உரிமைகளுக்காகவும் இன்னோரன்ன தேவைகளுக்காகவும் போராடி பல நூற்றுக்கணக்கான உயிர்களையும் விழுப்புண்களையும் உடலில் சுமந்துள்ளோம் இருந்தும் தற்போது எமது உறவுகளுக்கான உரிமைகளை ஜனநாயக ரீதியாக மக்கள் மத்தியில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நோக்கில் கொள்கை அடிப்படையில் இணைந்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.

அந்தவகையில் திருமலை மாவட்டத்தின் வெருகல் மற்றும் சம்பூர் மூதூர் போன்ற பிரதேச சபைகளில் வேட்பாளர்களை களமிறக்கி போட்டியிடுகின்றோம் எமது பிரதேசம் கடந்த யுத்த சூழ்நிலையிலும்
எந்த முன்னேற்றமும் அபிவிருத்திகளும் நடைபெறவில்லை யுத்தம் முற்றுப் பெற்ற பின்னரும் அபிவிருத்தியில் எமது பிரதேசம் கூடுதலாக புறக்கணிக்கப்பட்டது பா.உ மாகாண சபை உறுப்பினர்கள் பலர் இருந்தும் கவணிப்பார் அற்று இருக்கின்றது இதற்கு ஒரு வழி உரிமைகளுக்காக போராடிய நாம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் கிராம மட்டங்களில் உள்ள அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளோம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்