சூடைக்குடா திருக்குமரன் ஆலய நிர்வாகத்தினர் உட்பட ஏழு பேருக்கு தலா 25 ஆயிரம் அபராதம்

சூடைக்குடா திருக்குமரன் ஆலய நிர்வாகத்தினர் உட்பட ஏழு பேருக்கு தலா 25 ஆயிரம் அபராதம்
ஆர்.சுபத்ரன்
மூதூர் சூடைக்குடா மத்தளமலை திருக்குமரன் ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்டபட 7 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராத்துடன் இன்று (11)மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டு வழக்கு முற்றாகியது.
வரலாற்று சிறப்பு மிக்க மூதூர் சூடைக்குடா மத்தளமலை திருக்குமரன் ஆலயத்தில் கடந்த ஆண்டு மார்கழி மாதத்தில் ஆலய வளாகத்தை புனரமைக்கும் நோக்குடன் நிலம் சமப்படுத்தப்பட்ட பணிகள் இடம் பெற்று வந்தது.
இதன்போது இப்பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் காணப்படுவதாகவும் அதனை ஆலய நிர்வாகிகளும் பணியில் ஈடுபட்டிருந்த வேலையாட்களும்  சேதப்படுத்தினர். என்ற குற்றச்சாட்டின் பெயரில் சம்பூர் பொலிசாரால் கடந்த 01.01.2018 வழக்கு பதிவு செய்யப்பட்டு மூதூர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 04.01.2018ம் திகதி ஆலய நிர்வாகிகள் மற்றும் வாகன சாரதி உட்பட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.வேலையாட்கள் மூவர் பொலிசில் சரணடைந்து நீதவான் முன்னிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்
இவ்வழக்கு மீண்டும் 4ம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட போது இன்றைய தினம் 11ம் திகதி வரை இவ்விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்து.
இந்த நிலையில் இவ்வழக்கு இன்று நீதி மன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்ட ஆலய நிர்வாகிகளுக்கும் சாரதிக்கும்  ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமாகிய கி.துரைராஜசிங்கம் மற்றும் பிரபல சட்டத்தரணிகளான  ஜெகஜோதி மற்றும் புலேந்திரன் மகறுப் முபாரிஸ் பைசர் ஆகிய ஏழு சட்டத்தரணிகள் குழு ஆஸராகிய நிலையில் இன்று நீதி மன்றத்த்தால் தலா 25 ஆணரம் ரூபாய் அபராத தொகையுடன் இவ்விழக்கு முற்றுப் பெற்றுள்ளது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்