மருதமுனை அந்-நஹ்லா அரபுக் கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்றல் 

ஏ.எல்.எம்.ஷினாஸ்

மருதமுனை அந்-நஹ்லா அரபுக் கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்றல்

மருதமுனை அந்-நஹ்லா அரபுக் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டின் புதிய மாணவர்களை பதிவு செய்ததல் மற்றும் வரவேற்கும் நிகழ்வு என்பன எதிர்வரும் 2018.01.17 ம் திகதி கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது என கல்லூரியின் அதிபர் மெளலவி அஷ்-ஷெய்க் அபூஉபைதா (மதனி) தெரிவித்தார்.
கல்லூரியினால் கோரப்பட்ட விண்ணப்ப படிவங்களுக்கு அமைய கடந்த மாதம் (16) நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் அடிப்படையில் நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட சுமார் 70 மாணவர்களுக்கு  பாடசாலை கல்வி நடவடிக்கைகளுடன் இணைந்ததான ஹிப்ழுல் குர்ஆன் மற்றும் ஷரிஆ பிரிவு கற்கை நெறிகளை பயில்வதற்குரிய, பதிவு செய்வதற்கான அழைப்பு கடிதங்கள் மாணவர்களின் சொந்த முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புதிய பதிவுகளை மேற்கொள்ள மாணவர்கள் வரும் போது அனுமதிக் கடிதம், பிறப்பு அத்தாட்சி பத்திரம், பாடசாலை விடுகை பத்திரம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அடையாள அட்டையின் பிரதி, பாடசாலையில் கல்விகற்ற இறுதி ஆண்டு பெறுபேறுகள் உட்பட அழைப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டவாறு தேவையான பொருட்களோடு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மருதமுனைஅந்-நஹ்லா அரபுக் கல்லூரி ஹிப்ழுல் குர்ஆன், ஷரிஆ பிரிவு கற்கை நெறிகளை பாடசாலை கல்வி நடவடிக்கைகளுடன் இணைந்ததாக உணவு, தங்குமிட வசதிகளுடன் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு 0772482735 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்