கலிபோரினியாவில் ஏற்பட்ட சேற்றுடனான நிலச்சரிவில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை

கலிபோரினியாவில் ஏற்பட்ட சேற்றுடனான நிலச்சரிவில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை

கலிபோரினியாவில் ஏற்பட்ட சேற்றுடனான நிலச்சரிவில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

குறித்த நிலச்சரிவின் பின்னர், லொஸ்ஏஞ்சல்ஸில் உள்ள இலங்கை சமூகத்தவர்களுடனும், அதிகாரிகளுடனும் இலங்கை தூதரக பிரிவு தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிலச்சரிவில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக அறிக்கையிடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தென் கலிபோர்னியாவில் ஏற்பட்ட சேற்றுடனான நிலச்சரிவில், 17 பேர் பலியாகியுள்ளனர். பெருமளவானோர் காயமடைந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்