3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 183 வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி

டுனேடின்: 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 183 வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 73, ரோஸ் டெய்லர் 52, குப்தில் 45 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ரும்மான் ரேயிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சதாப் கான் 2 விக்கெட்டையும் அஷ்ரப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 258 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்தின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் சீட்டு கட்டுபோல் சரிந்தது. இதனால் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி தப்பியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 27.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்களில் சுருண்டது.

நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்