மலேசிய விமான நிலையத்தில் மகனோடு தவித்த தாயார்

மலேசிய விமான நிலையத்தில் மகனோடு தவித்த தாயார்

மலேசியாவில் மரணமடைந்த மகனின் உடலுடன் தவித்த தாய்க்கு, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது தாயுடன் அவுஸ்திரேலியவிற்கு சென்றுவிட்டு இந்தியாவுக்கு, மலேசியா வழியாக திரும்பியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில், அந்த வாலிபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால், தனது மகனின் சடலத்துடன் தாய் விமான நிலையத்தில் தவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து, அந்த வாலிபரின் நண்பர் ஒருவர் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறுகையில், ‘சுஷ்மா சுவராஜுக்கு அவசர மற்றும் தயவு கோரிக்கை. எனது நெருங்கிய நண்பரும், அவரது தாயும் அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தனர்.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில், எனது நண்பர் மரணமடைந்தார். அந்நண்பரின் தாய் தனியாக விமான நிலையத்தில் சிக்கியுள்ளார். அவருக்கு எப்படி உதவுவது என்று எனக்கு தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த ட்விட்டைப் பார்த்த சுஷ்மா சுவராஜ், உடனடியாக கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

மேலும், மரணமடைந்த நபரின் உடலை அரசின் செலவில் இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘மரணமடைந்தவரின் உடலை இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு கொண்டு வருவார்கள்.

மரணமடைந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்