இந்திய கடவுச்சீட்டில் அதிரடி மாற்றம்

இந்திய கடவுச்சீட்டில் அதிரடி மாற்றம்


குடியுரிமைச் சான்றாக உள்ள கடவுச்சீட்டுகளில் கடைசி பக்கத்தில் உள்ள முகவரி அடங்கிய பக்கத்தை நீக்க இந்திய வெளிவிவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட கடவுச்சீட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் தரவாக பதிவு செய்யப்பட்டுள்ளது,

இந்த நிலையில் குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக வெளிவிவகாரத்துறை கடவுச்சீட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை நீக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

முகவரி அடங்கிய பக்கத்தை நீக்குவதால் அதனை இனி முகவரி சான்றாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

பழைய கடவுச்சீட்டிட்டுகளில் முகவரி பக்கம் அடங்கியிருந்தாலும், அதன் ஆயுட்காலம் முடிந்து புதுப்பிக்கும் போது, முகவரி பக்கம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்திய அரசு சார்பில் மூன்று நிறங்களில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. அரசு பணி அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அரசு பணிக்காக செல்பவர்களுக்கு வெள்ளை நிறத்திலான கடவுச்சீட்டும்,

தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிற கடவுச்சீட்டும், பிற மக்களுக்கு நீல நிற கடவுச்சீட்டும் வழங்கப்படுகிறது. குடிமக்களுக்கு நீல நிறத்தில் கடவுச்சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது,

இந்நிலையில், குடியுறவு சோதனை தேவை நிலையில் உள்ள கடவுச்சீட்டுகளை ஆரஞ்சு வண்னத்தில் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்