சிறப்பாக இடம் பெற்ற மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் மரதன் ஓட்ட போட்டி.

-மன்னார் நிருபர்-
(13-1-2018)
மன்-புனித சவேரியார் ஆண்கள்   தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் நிகழ்வான மரதன் ஓட்ட போட்டி இன்று சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் தலைமன்னார்-மன்னார் பிரதான வீதியில்  ஆரம்பமானது.
-பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் றெஜினோல்ட் தலைமையில் இடம் பெற்ற குறித்த மரதன் ஓட்ப் போட்டியினை விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிறுப்பு சந்தியில் இருந்து குறித்த மரதன் ஓட்டப்போட்டி ஆரம்பமானது.குறித்த போட்டியில் சுhர் 500 மாணவர்கள் கலந்து கொண்டியிருந்தனர்.
இதன் போது 1 ஆம் இடத்தை கிசோவன், 2 ஆம் இடத்தை யூட் கிரின்டிசன்,3 ஆம் இடத்தை டிபிசன் ஆகிய மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பாடசாலையின் பழைய மாணவர்கள்,பெற்றோர்,நலன் விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்