விஜய் சேதுபதி படத்திலிருந்து நதியா விலகல்..

ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, மிஸ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் இசை அமைக்கிறார், பி.எஸ்.விநோத், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

இந்தப் படத்தில் முதலில் நதியா ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக இருந்து, அவர் ஒப்பந்தமும் செய்யப்பட்டிருந்தார். வில்லி கேரக்டர் தான் என்று கூறப்பட்டதாம். ஆரண்ய காண்டம் படம் பிடித்திருந்ததால் கதை கேட்காமல் நம்பி ஒப்புக் கொண்டாராம் நதியா. ஆனால் நடிக்க வந்த பிறகுதான் அது கொடூர வில்லி கேரக்டர் என்பது தெரிய வந்ததாம். இதில் நடித்தால் தனது இமேஜ் பாதிக்கப்படும் என்று கருதியவர் படத்திலிருந்து விலகி விட்டார். தற்போது அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். “படத்திலிருந்து விலகியது உண்மைதான் ஆனால் அதற்கான காரணத்தை சொல்ல முடியாது” என்று கூறியிருக்கிறார் நதியா.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்