16 வயதுக்குட்பட்டோருக்கு உற்சாக பானம் விற்கக்கூடாது?

16 வயதுக்குட்பட்டோருக்கு உற்சாக பானம் விற்கக்கூடாது?


பிரித்தானியாவில் பதினாறு வயதிற்கு உட்பட்டோருக்கு உற்சாகப் பானங்களை விற்பனை செய்வதனை தடை செய்ய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொன்சவேற்றிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரியா கோல்ஃபீல்ட், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், தினசரி 15 உற்சாகப் பானங்களை அருந்துவதானது தற்கொலைக்கு காரணமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், பானங்களுக்கான உள்ளடக்கங்கள் பாதுகாப்பானவை என கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் உறுதிபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, இவை 16 வயதிற்குட்பட்டோருக்கு சந்தைப்படுத்தப்படுவதில்லை என்றும் பிரித்தானிய மென்பானச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரபல அங்காடியொன்றில் கஃபைன் உள்ளடக்கப்பட்ட உற்சாகப் பானங்களை கொள்வனது செய்வோர் தொடர்பான ஆய்வை அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.

அதற்கமைய, ஒரு லீற்றர் மென்பானத்தில் 150 மில்லிகிராமிற்கு அதிகமான கஃபைன் எனப்படும் புத்துணர்வூட்டும் பொருள் உள்ளடக்கப்பட்டிருப்பின், அதனை கொள்வனவு செய்வோரின் வயதை நிரூபிக்க வலியுறுத்தப்படுவர். இந்நடவடிக்கை எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பல்பொருள் அங்காடி அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்