இரு ஆசிரியர்களின் செயற்ப்பாட்டால் மாணவர் தொகை 400 இலிருந்து 130ஆக குறைந்தது.

இரு ஆசிரியர்களின் செயற்ப்பாட்டால் மாணவர் தொகை 400 இலிருந்து 130ஆக குறைந்தது.


ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வெளி ஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் 400இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றும் வரும் நிலையில் இன்றைய தினம் 130 மாணவர்களே சமூகமளித்துள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் கற்பித்தலில் ஈடுபடும் இரண்டு ஆசிரியர்களின் நடவடிக்கை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரு ஆசிரியர்களும், மாணவர்களுடைய கல்வி விடயத்தில் அக்கறை காட்டுவதில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் நேற்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் 100இற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டதோடு, அவர்கள் குறித்த ஆசிரியர்களை உடனடியாக கல்வி திணைக்களம் இடமாற்றம் செய்யவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், குறித்த இரண்டு ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யும்வரை பாடசாலைக்கு எமது பிள்ளைகளை அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து இன்றைய தினம் இவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமேஷ்வரனிடம் வினவியபோது,

இப்பாடசாலையில், இரண்டு ஆசிரியர்கள் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கையில் அக்கறைக் காட்டுவதில்லை என அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஊடாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஓர் இரு நாட்களில் நடவடிக்கை எடுக்கும்படி கல்வி அதிகாரிகளுக்கு நான் பணித்துள்ளேன்.

தேர்தல் முடிந்த பின்பு இப்பாடசாலை தொடர்பான முரண்பாடுகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம்.

இதேவேளை, பாடசாலை நாட்களில் மாணவர்களுடைய கல்வியை பாதிக்கும் அளவிற்கு பெற்றோர்கள் நடந்துக்கொள்ளகூடாது.

பாடசாலையில் இருக்கும் ஏனைய ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர், எனவே மாணவர்களை உடனடியாக பாடசாலைக்கு பெற்றோர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்