சிறுமியின் வயிற்றில் இருந்த பத்து கிலோ கட்டி

சிறுமியின் வயிற்றில் இருந்த பத்து கிலோ கட்டி


அவுஸ்திரேலியாவில் 11 வயது சிறுமியின் வயிற்றில், 10 கிலோ அளவில் இருந்த கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து நகரைச் சேர்ந்த சிறுமி Cherish-Rose Lavelle. இவரின் வயிறு மிகவும் பெருத்திருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நல்ல உடல் எடையுடன் இருந்த Cherish-க்கு, கடந்த இரண்டு மாதங்களில் 15 கிலோ வரை எடை குறையத் தொடங்கியுள்ளது. மேலும், அவரின் வயிறு மிகவும் பெரிதாக இருந்ததால், Cherish-யின் தாயார் அவருக்கு உணவு கட்டுப்பாட்டை விதித்தார்.

எனினும், சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் சிறுமியை பார்த்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்துள்ளனர்.

அதன் பின்னர், சிறுமியை பரிசோதித்த பின்னர் அவரின் வயிற்றில் 10 கிலோ அளவில் கட்டி இருந்தது தெரியவந்தது.

மேலும், புற்றுநோய் செல்களின் ஆக்கிரமிப்பாலேயே இந்த கட்டி உருவானதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அச்சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, கட்டியானது வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்