தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநகரசபை வேட்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநகரசபை வேட்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகர சபை வேட்பாளர்களுடனான தேர்தல் கள நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் நல்லையா வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மண்முனை வடக்குப் பிரதேச கிளையின் தலைவர் வே.தவராசா தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாநகரசபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பிரச்சார நிலைமைகள் மற்றும் மக்களின் எண்ணப்பாடுகள், தேர்தல் கள நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன். தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்