கொழும்பில் பயணித்துக் கொண்டிருந்த அதிநவீன வாகனத்தில் தீ விபத்து

கொழும்பில் பயணித்துக் கொண்டிருந்த அதிநவீன வாகனத்தில் தீ விபத்து


கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று தீடீரென தீப்பற்றியுள்ளது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றே இவ்வாறு திடீரென தீப்பற்றியுள்ளது.
அந்த மோட்டார் வாகனத்தில் பயணித்தவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீப்பற்றியமையினால் மோட்டார் வாகனத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கொள்ளுப்பிட்டிய பொலிஸார் மற்றும் கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவு தீயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்