விவேகானந்தா விளையாட்டு கழகமும் ,கண்ணகி சனசமூக நிலையமும் இணைந்து ஏற்பாட்டில் விவேகானந்தரின் 156வது ஜனன தின நிகழ்வுகள்!!

கண்ணகி சனசமூக நிலையமும் விவேகானந்தா விளையாட்டு கழகமும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் 156வது ஜனன தினத்தினை சனசமூக நிலையத்தில் அமைந்துள்ள சுவாமியின் திருவுருவச் சிலைக்கு அருகாமையில்,

இவ் வருடத்தின் புதிய தலைவர் வினோதராஜன் உட்பட முன்னாள் தவிசாளர் s. நேசராஜா, முன்னாள் செயலாளர் k. உமாரமணன்,முன்னாள் கண்ணகி அறநெறி பாடசாலை தலைவர் ஜெயசிறில்,கண்ணகி சனசமூக நிலைய போசகர் பேரின்பம்,காரைதீவு இந்து சமய அபிவிருத்தி உத்தியோகஸ்தரும் கலாச்சார உத்தியோகத்தருமான ஜெயராஜூ,காரைதீவு விபுலானந்தா மணிமண்டப பொருளாளரும் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளருமான உருத்திரன் அவர்களும்,விவேகானந்தா விளையாட்டு கழகஉறுப்பினர்களும்அத்துடன் ஆண்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்களும் கலந்து கொண்டு நந்தி கொடியேற்றி தீபாராதனை இடம் பெற்று சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து ,இறை அஞ்சலி செலுத்தி வருகை தந்த முக்கியஸ்தர்களின் சிற்றுரைகள் இடம் பெற்றது.

சுவாமியின் திருவுருவப்படம் பொறிக்கப்பட்ட இவ்வாண்டுக்கான நாட்காட்டியும் வெளியிட்டதுடன் நிகழ்வினை சிறப்பாக நடைபெற்று முடித்தனர்…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்