வவுனியா வடக்கு மக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கிய அறக்கட்டளை

வவுனியா வடக்கு மக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கிய அறக்கட்டளை

வவுனியா வெளிச்சம் அறக்கட்டளை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து 2018 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் முகமாக நெடுங்கேணிப் பகுதியில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களான கற்குளம்,ஒலுமடு போன்ற பிரதேசங்களில் மிகவும் வறிய நிலையிலும் பிள்ளைகளின் பராமரிப்பு இல்லாமல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு வெளிச்சம் அறக்கட்டளையின் மூலம் பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் அவர்களுடைய வீடுகளுக்கு நேரில் சென்று நேற்றையதினம் (12.01.2017) வழங்கி வைக்கப்பட்டது

இந் நிகழ்வில் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு.பா. லம்போதரன், செயலாளர் திரு. தி. கார்த்திக், மற்றும் உறுப்பினர் திரு.வ. பிரதீபன், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் சமூகசேவை உத்தியோகஸ்தர் திருமதி.வி.பிறேமநிதி, சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி. செ.கலா, கற்குளம் கிராமத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி. ற. புவிதா, ஒலுமடு கிராமத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு.சு. றஜனிகாந்தன், அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு.கோ.கேசவன், போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்