காரைதீவு பிரதேசத்தில் உள்ளுராட்சிமன்றதேர்தலுக்கான தமிழ்தேசியக்கூட்டமைப்பின் கிளைக்காரியாலயம் திறந்துவைப்பு.

காரைதீவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளைக்கரியாலயம் இன்று (13) பிற்பகல் 4.00 மணியளவில் 6ம் வட்டாரத்திட்குரிய கிழக்கு காரியாலயம் யோகராசா சுதாகரன் தலைமையில் வைபவரீதியாக அதிதிகள் பங்களிப்புடன் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் கௌரவ கவிந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ராஜேஸ்வரன்,காரைதீவு பிரதேச உள்ளுராட்சிமன்ற தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மற்றும் காரைதீவு பிரதேசத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலாவது கிளைக்கரியாலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது .

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்