‘தூய நகரம் தூய கரங்கள்’ என்ற கொள்கைக்கு அமைவாக இந்தத் தேர்தலில் ஊழலிலிருந்து மக்களை காப்பாற்றுவதே எமது நோக்கம்!! தமிழ் தேசிய மக்கள் முன்ணணி!

‘தூய நகரம் தூய கரங்கள்’ என்ற கொள்கைக்கு அமைவாக இந்தத் தேர்தலில் ஊழலிலிருந்து மக்களை காப்பாற்றுவதே எமது நோக்கம்!! தமிழ் தேசிய மக்கள் முன்ணணி!

 

வவுனியாவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணி அபேட்சகர்களின் சந்திப்பு ஒன்று இன்று (12) மாலை 6.30 மணிக்கு குருமன்காட்டில் அமைந்துள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.தனுஸ்காந் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.

வவுனியாவில் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மாபெரும் ஊழல்களை நிகழ்த்தி முடித்திருந்தது. அதன் காரணமாக அவர்களுடைய ஆட்சி கலைக்கப்பட்டு நகரசபை செயலாளரின் கட்டுப்பாட்டிலேயே நிர்வாகம் இருந்தத.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்காலத்தில் ஊழலை நிகழ்த்துவதற்காகவும் மக்களின் சொத்துக்களை சூறையாடுவதற்கும் திட்டமிட்டே இந்தத் தேர்தலில் குதித்துள்ளார்கள்.

எமது கட்சியின் தூய நகரம் தூய கரங்கள் என்ற கொள்கைக்கு அமைவாக இந்தத் தேர்தலில் ஊழலிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு இந்தத் தேர்தலில் குதித்துள்ளோம் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கு பெருவாரியாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்து ஆட்சியை கைப்பற்றியபோதும் மக்களுக்கு எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்