மாவடியம்மன் கிராம மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தனியார் அமைப்புக்கள் 

மாவடியம்மன் கிராம மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தனியார் அமைப்புக்கள்

 எஸ்.என்.நிபோஜன்

பல வருடங்களாக அடிப்படை வசதிகள் கூட அற்ற நிலையில் தமது வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாத நிலையிலும் அரசியல் வாதிகளாலும் அரச அதிகாரிகளாலும் கவனிக்கப்படாமல் வாழ்ந்துவரும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மாவடியம்மன் கிராம மக்களது பிரச்சனைகளை சில வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து ஊடகங்கள் ஊடாகவும் சமூகவளைத்தளங்கள் ஊடாகவும்   வெளிக்கொண்டு வந்திருந்தனர் அதற்கமைவாக
 கல்போனியா , டென்மார்க் மற்றும் இலங்கை போன்ற  நாடுகளில்  சட்டபூர்வமாக தனது நண்பர்கள் உதவியோடு டென்மார்கில் இருந்து  திருமதி வாணி தனேஸ்வரனின் தலைமையின் கீழ்   செயல்ப்பட்டுவருகின்ற அறிவியல் மாற்றம் சமூக மேன்பாட்டு நிறுவனமானது(SCSDO)  இக் கிராம மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது இவ்  அமைப்பானது இக் கிராமத்தில் வசிக்கும் ஏழு குடுமபங்களுக்கு தலா எழுப்பத்தந்தாயிரம் ரூபா பெறுமதியில் தகரத்தினால் ஆன தற்காலிகக வீடுகளையும் பதின்நான்கு குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை கொண்டு செலக்கூடியவாறு அவர்களுக்கு தலா பதினைந்தாயிரம் ரூபா பெறுமதியில் அவர்களுக்கு மூன்று மாத ஊர்கோழிக் குஞ்சுகளும் கோழி வளர்ப்பதற்கான கூடும்  வழங்கப்பட்டுள்ளது  கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட இவ் வேலைத்திட்டமானது அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் இன்று அவர்களுக்கான தற்காலிக வீடுகளும் கோழி மற்றும் வளர்ப்பதற்கான கூடுகளும் கையளிக்கப்பட்டுள்ளது
இவ் அமைப்பானது  வறுமைக்   கோட்டின் கீழ் வாழும் உறவுகளை இனம் கண்டு அவர்கள் வாழ்வை மேம் படுத்தும் நோக்கில் வடக்கிலும் கிழக்கிலும் சுயதொழில் , மனிதனேய மற்றும் கல்வி ஊக்குவிற்பு போன்ற உதவிகள் வளங்கி வருகின்றது அறிவியல் மாற்றம் சமூக மேன்பாட்டு நிறுவனத்தின்(SCSDO) இலக்கில் ஒன்றான பின் தங்கிய கிராமங்களை மேம்படுத வேண்டும் என்ற முயற்ச்சியை தனது நண்பர்கள் உதவியோடு டென்மார்கில் வசித்துவரும் திருமதி வாணி தனேஸ்வரன் அவர்கள் முன்னெடுத்து வருகின்றார் இவ் அமைப்பினால் குறித்த மாவடியம்மன் கிராம மக்களுக்கு மேலும் வாழ்வாதரத்தினை ஊக்குவிப்பதற்கான திட்டம் ஒன்றும் இலவச மாலைநேரக் கற்றல் , மற்றும் கற்பதற்கான பொது  மண்டபம் பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி  போன்ற செயற்திட்டங்கள்  காலக்கிரமத்தில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கின்றனர்
 மற்றும்  இக்  கிராம  பாடசாலை  மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை புத்தகப்பை மற்றும் ஒருவருடத்திற்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் என்பவற்றை புலம்பெயர் நாட்டிலிருந்து இயங்கும் புன்னகை எனும் அமைப்பு வழங்கியுள்ளதுடன்   தந்தையை இழந்த இரு மாணவர்களுக்கு புலம்பெயர் நாட்டில் உள்ள எழுத்தாளர் ஜெசுதா என்பவரும் நலன்விரும்பி மனோசாந்தி என்பவரும் ஓவ்வொரு துவிச்சக்கர வண்டியையும் வழங்கியுள்ளனர்
அரசியல் வாதிகளினதும் பல அமைப்புக்களின் பொய்  வாக்குறுதிகளை நம்பி எதுவும் இல்லாமல் ஏமாற்றப்பட்ட உதவியை செய்த இவ் அமைப்புக்களுக்கும் தனிநபர்களுக்கும் எங்களுக்கு உதவுவதற்கு காரணமாக இருந்த ஊடகவியலாளர்களுக்கும் நன்றி என  மாவடியம்மன் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்