கனடாவின் தைப் பொங்கல் பெருவிழாவில் கனேடியர்கள் பங்கு கொள்ள அழைப்பு

கனடாவின் தைப் பொங்கல் பெருவிழாவில் கனேடியர்கள் பங்கு கொள்ள அழைப்பு


கனடாவில் கொண்டாடவுள்ள தைப் பொங்கல் பெருவிழாவில் பங்கு கொள்ள கனேடியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பை கனாடாவின் எதிர்க்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஸீர் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தைப் பொங்கலை குறிக்கும் விதமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பாரம்பரிய திருவிழாவான தைப் பொங்கல் விழாவை கனடா மக்கள் கொண்டாடவுள்ளனர்.

இந்த நிகழ்வில் கனேடிய மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பொங்கல் உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை கொண்டு வரும் என்று நம்புவதாக ஆண்ட்ரூ ஸீர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை , தைப் பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என ஆண்ட்ரூ ஸீர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்