பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை

பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை


சென்னையில் பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன், இவரது மகன் முனியன்(வயது 24), ஆட்டோ டிரைவராக இருக்கிறார்.

இந்நிலையில் இன்று மதியம் பெசன்ட் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மர்மநபர்கள் முனியனை கீழே தள்ளி சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.

இதில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார், பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததால் பொதுமக்கள் அலறி பயந்து ஓடினர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ஐஸ்ஹவுஸ் பொலிசார் முனியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் விசாரணையில், முனியனை கொலை செய்தது குப்புசாமி என்பவரின் மகன் பாம்பே சத்யா என்பது தெரியவந்துள்ளது.

இவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில், முனியனை கொலை செய்ததற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்