வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் களைகட்டிய பொங்கல்

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் களைகட்டிய பொங்கல்

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தைப்பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இப் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் பேரூந்து சாரதிகள், நடத்துனர்கள், உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு ஓரு வருடமாக பூட்டப்பட்டு இருந்த புதிய பேரூந்து நிலையம் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் வட மாகாண முதலமைச்சரின் முயற்சியால் அண்மையில் இயங்க ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்