கனரக வாகன சாரதிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு மேலதிகமாக மற்றுமொரு அனுமதிப் பத்திரம்

கனரக வாகன சாரதிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு மேலதிகமாக மற்றுமொரு அனுமதிப் பத்திரம்


கனரக வாகன சாரதிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு மேலதிகமாக மற்றுமொரு அனுமதிப் பத்திரம் ஒன்று வழங்கப்படவுள்ளது.

புதிய நடைமுறை குறித்து மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த வேலைத்திட்டம் இந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பேருந்து சாரதிகளும் இந்த அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.

கனரக வாகனங்களை செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரத்தை பெற்று இரண்டு வருட காலப்பகுதியை கொண்டுள்ள நபர்கள் இந்த அனுமதிப் பத்திரத்திற்காக விண்ணப்பிக்க முடியும்.

பேருந்து செலுத்துவதற்கு இது விசேட தகுதியாக கொண்டதாக அமையும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளயர் சஞ்சீவ பந்து கீர்த்தி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்