தென்னாபிரிக்கா வலுவான நிலையில்

தென்னாபிரிக்கா வலுவான நிலையில்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் தென்னாபிரிக்க அணி 269 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் ஆரம்பமாகியது. அதனடிப்டையில் ஆரம்பமான போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்து களமிறங்கியது.

இதனடிப்படையில் தென்னாபிரிக்காவிற்கு சாதகமான செஞ்சூரியன் மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெறும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் தென்னாபிரிக்கா அணி 90 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களை பெற்றுள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பில் மர்க்கிரம் 150 பந்துகளில் 94 ஓட்டங்களை கூடுதலாக பெற்று ஆட்டமிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்