விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்தமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்தமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்தமையை கண்டித்து கேகாலை – அவிசாவளை பிரதான வீதியை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் பஸ் ஒன்றின் சாரதியின் கவனயீனத்தால் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கேகாலை பின்தெனிய பகுதியில் பஸ்ஸில் மோதுண்டு ஏழு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்தள்ளனர்.

காயமடைந்த இருவரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேகாலையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பஸ், வீதியில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்