தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

தமிழர்களின் ஈகைத் திருநாள், இருள் அகன்று வாழ்வில் ஒளிபிறக்கும் நாள், தைத் திருநாளாம் ஜனவரி பதினான்காம் திகதியன்று தைமாதப் பிறப்பைக் கொண்டாடும் சகல தமிழர்க்கும் இனிய தைப்பொங்கல்

வாழ்த்தைக் கூறிக்கொள்கின்றோம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர் எமது முன்னோர்கள். பொய்மை எனும் இருளில் புதையுண்டு போயிருக்கிறது தமிழரின் போராட்ட வரலாறு. வறுமையும், பொருள் இல்லா வெறுமையும், இயலாமையும் வக்கிரமத்துடன் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான இருள் சூழ்ந்த காலகட்டத்தில் நாம் இன்று
உள்ளோம்.

ஆதவன் ஒளியால் குளிரகன்று, இருள் விலகி, பயிர்விளைய அந்த விளைச்சலை எமக்கீந்த பகலவனுக்கு புதுப்பானையில் புத்தரிசியுடன் பாற்பொங்கலிட்டு படையலிட்டு தமிழர் நாம் நன்றி கூறி தலை வணங்கும் நாள் தைப்பொங்கல் திருநாள். அந்நன்நாளை மிக சிறப்பாக அனைவரும் கொண்டாடவேண்டும் என அவாவுகின்றோம்.

அதேபோல் வீட்டுக்கொரு பிள்ளையை, வீதிக்கொரு குடும்பத்தையே ஈகையிட்டு எமதூர்களில் ஏகாதிபத்திய இருள் அகற்ற தமிழர்கள் போராடினர். இன்று உதயமாகி வரும் உன்னதமான சூழலில் நன்றி மறவா தமிழராக, தியாகச் சுடராகி ஒளிதந்த அந்த தமிழர்களின் குடும்பங்களில் இருள் அகற்றி உதவி செய்ய நாம்
அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழன்பர்களே உங்களுக்காக கொடுந்துன்பம் அனுபவித்து தத்தம் இளமைக்கால வாழ்கையை ஈந்தவர்களுக்கு நன்றியுடன் உங்கள் வாக்கைக் கொடுத்து கொண்டாடுவோம். தைவமாய் ஆனோரை நினைத்தும், உளம் நலிந்து உடல் கிழிந்து கடன் மிகுந்து நடைப்பிணமாய் வாழும் எம்மக்கள் மனமும் உடலும் தெம்பாக எம்பிட தையலிட்டுக் காயம் ஆற்றி வாழ்க்கை கொடுக்கும் மாற்றத்திற்கான மாதமாக இவ்வருட தைப்பிறப்பைக் கொண்டாடுவோமாக. தர்மம் தனை சூது கவ்வும். ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்.

தையல் இயந்திரத்திற்கு வாக்களிப்போமாக.

தை மகள்போல் பொலிவுடன் தலை நிமிர்வோமாக.

தாயகம் காப்போம். தமிழ் வீரம் மீட்போம்.

விநாயகமூர்த்தி முரளிதரன்
தலைவர்
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்