01ம் தரத்திற்கு ஆசிரியரை நியமக்குக! பெற்றோர்கள் கோரிக்கை

(அப்துல்சலாம் யாசீம்

01ம் தரத்திற்கு ஆசிரியரை நியமக்குக! பெற்றோர்கள் கோரிக்கை


திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்திற்கு 01ம் தரத்திற்கு ஆசிரியர் எவரும் நியமிக்கப்படவில்லையென பெற்றோர்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வருடத்திற்கான 01ம் ஆண்டு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் விஷேட நிகழ்வுகள் அனைத்து பாடசாலைகளிலும் இடம் பெறவுள்ள நிலையில் ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு செல்லவிருப்பதாகவும் தங்களுடைய பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளில் முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்பதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் சிறந்த பாடசாலையாகவும் பழைமை வாய்ந்த பாடசாலையாகவும் போற்றப்படும் இப்பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு கூடம்  .பொது நூலகம் கட்டிட வசதிகள் கூட இல்லாத நிலை காணப்படுவதாகவும் 01ம் தரத்திற்கு கல்வியை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் கூட இல்லலையெனவும் தெரிவிக்கும் பெற்றோர்கள்  வருடத்திற்கு ஒரு பெற்றோர்களிடமிருந்து மூவாயிரம் ரூபாய் அறவிட தீர்மானித்துள்ளதாகவும் அப்பணத்தை செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி 01ம் தரத்திற்கு ஆசிரியரொருவரை நியமித்து தருமாறு பல தடவைகள் கல்வி அமைச்சின் உயரதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தெரியப்படுத்தியும் கல்வி மேம்பாடு விடயத்தில் மந்தகெதியில் செயற்படுவதாகவும் கிராமமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித பேகொல்லாகம ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் கல்வி விடயத்தில் அக்கறை காட்டி 01ம் தரத்திற்கு உடனடியாக ஆசிரியரொருவரை நியமித்து தருமாறு கிராமமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்