பட்டாசு கொழுத்திய சிறுவன் படுகாயம்!

பட்டாசு கொழுத்திய சிறுவன் படுகாயம்!


தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக மன்னார் பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் பட்டாசு கொழுத்திய 11 வயது சிறுவன் காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

பட்டாசுகளை கோர்த்து அவற்றை கொழுத்திய போதும் அது வெடிக்காததன் காரணமாக அதன் அருகில் சென்று அவற்றை மீண்டும் கொழுத்த முயற்சிக்கையில் அவை திடீரென வெடித்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் சிறுவனின் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இரண்டு கண்களிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக மன்னார் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்