அட்டனில் அதிசயக் கோழி முட்டை இட்டுவரும் பேடு

(க.கிஷாந்தன்)

அட்டனில் அதிசயக் கோழி முட்டை இட்டுவரும் பேடு

அட்டன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பேடு ஒன்று 180 கிராம் நிறை கொண்ட பாரிய முட்டைகளை இட்டு வருவதாக பண்ணை உரிமையாளர் மூர்த்தி தெரிவித்தார்.

வழமையாக பெட்டைக் கோழி ஒன்று சுமார் ஆறு தொடக்கம் ஏழு கிராம் வரையான நிறை கொண்ட சாதாரண முட்டைகளை மாத்திரம் இட்டு வந்துள்ளதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரட்டை கோதுடைய பெரிய முட்டையொன்றினை இட்டுள்ளதாகவும் 14.01.2018 அன்று சுமார் 180 கிராம் கொண்ட அதிசயத்தக்க பாரிய முட்டை ஒன்றினை இட்டுள்ளதாகவும் சாதாரணமாக பெட்டை கோழி ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை முட்டை இடுவதாகவும், ஆனால் இந்த கோழி இரண்டு தடவைகள் வித்தியாசமான முட்டைகளை இட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்