3 மாத பிஞ்சு குழந்தையை புதருக்குள் வீசிய தந்தை

3 மாத பிஞ்சு குழந்தையை புதருக்குள் வீசிய தந்தை


கொலம்பியாவில் தந்தை ஒருவர் தமக்கு பிறந்த 3 மாத பெண் குழந்தையை இருமுறை கொல்ல திட்டமிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் Chorro Blanco de Tunja என்ற பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

ஆண் பிள்ளை வேண்டும் என மிகவும் ஆசைப்பட்ட Javier Paipa என்பவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் குழந்தையை கடத்தி சென்று கிராம எல்லையில் அமைந்துள்ள புதருக்குள் வீசியுள்ளார்.

இந்த நிலையில் தமது பிஞ்சு குழந்தையை காணவில்லை என அதன் தாயார் பொலிசாருக்கு புகார் அளிக்கவே, பொலிசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் புதருக்குள் இருந்து அழுகை சத்தம் கேட்டு குழந்தையை மீட்டுள்ளனர்.

அடுத்து பிறக்கவிருப்பது பெண் பிள்ளை என தெரிய வந்ததும் தமது மனைவியை துன்புறுத்த துவங்கிய அவர், குழந்தை பிறந்த பின்னர் தமது பார்வையில் அதனை காட்ட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் குழந்தை பிறக்கவே திடீரென்று ஒருநாள் குழந்தையும் தாயாரும் வீட்டில் படுத்திருந்த நேரம் குறித்த நபர் வீட்டை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய தாயாரும் குழந்தையும் அதன் தந்தையிடம் இருந்து ஒதுங்கியே இருந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே குடியிருப்பில் இருந்து குழந்தையை கடத்திச் சென்று புதரில் வீசியுள்ளார்.

தற்போது பொலிசாரிடம் சிக்கியுள்ள Javier Paipa விசாரணையில் உள்ளார். விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார் என கூறப்படுகிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்