சகோதரர் மரணத்துக்கு நீதி கேட்டு 764 நாட்களாக போராட்டம்

சகோதரர் மரணத்துக்கு நீதி கேட்டு 764 நாட்களாக போராட்டம்


கேரளாவில் சகோதரர் மரணத்துக்கு நீதி கேட்டு இளைஞர் ஒருவர் 764 நாட்களாக தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு மே 19ம் திகதி ஸ்ரீஜித்தின் சகோதரர் ஸ்ரீஜீவ், மொபைல் போனை திருடு செய்வதாக கூறி பாரசால பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சிறையில் விஷம் அருந்தியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீஜீவ், 21ம் திகதியே இறந்துபோனார்.

இவ்வழக்கை விசாரித்த மாநில பொலிஸ் புகார் ஆணையம், சம்மபந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது, மேலும் ஸ்ரீஜீவ் பொலிஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் பேரில் அவரது குடும்பத்துக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டதுடன், மாநில அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்த சொன்னது.

இந்த முடிவுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் சிபிஐ விசாரணை கோரி ஸ்ரீஜீவின் சகோதரர் ஸ்ரீஜித் 764 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்.

மாநில அரசு ஸ்ரீஜித்தின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தாலும், மத்திய அரசு சிபிஐ விசாரணை கோரிக்கையை நிராகரித்தது.

இந்நிலையில் மீண்டும் சிபிஐ விசாரணை கோர கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கருணை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சகத்துக்கு கடிதம் எழுத முதல்வர் பினராஜி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

#JusticeForSreejith என்ற ஷாஷ்டேக்கை பயன்படுத்தி பிரபலங்கள் பலரும் ஸ்ரீஜித்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்