பெண்ணின் மீது வேகமாக கார் ஏறிய பின்பும் உயிர் பிழைத்த பெண்

பெண்ணின் மீது வேகமாக கார் ஏறிய பின்பும் உயிர் பிழைத்த பெண்

சீனாவில் பெண் ஒருவர் மீது கார் ஏறியும் அவர் பிழைத்துள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சீனாவின் லியான்யுங்காங் நகரத்தின் சாலையில் நடந்த இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த சாலையில், சிக்னல் விழுந்த பின்னரும் ண் ஒருவர் ரோட்டை கடக்கும்போது, அவருக்கு பின்னால் வந்த கார் அந்த பெண்ணின் மீது வேகமாக மோதியதில், அப்பெண் அடிபட்டு கீழே விழுகிறார்.

காருக்கு அடியில் கிடந்த அப்பெண், இறந்திருப்பார் என அனைவரும் நினைத்த நிலையில், மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோவை சீனாவின் தனியார் கேபிள் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்