கணவரின் இறந்த சடலத்துடன் வசித்த மனைவி!

கணவரின் இறந்த சடலத்துடன் வசித்த மனைவி!

கொல்கத்தா Haridevpur-ல் ஓர் குடியிருப்பில் வயதான தம்பதியரான Amar Sanyal மற்றும் Hasirani Debi வசித்து வந்தனர்.

குழந்தையில்லாத இத்தம்பதியினரின் வாழ்வில் இப்படிப்பட்ட துயரமா நிகழ வேண்டும்? என சிந்திக்க வைக்கிறது இச்செய்தி.

சில நாட்களாக இவர்களது குடியிருப்பு பூட்டியே இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர், துர்நாற்றமும் வரவே உடனடியாக பொலிசுக்கு தகவல் அளித்தனர்.

கதவை உடைத்த பொலிசார் அழுகிய நிலையில் Amar Sanyal-ன் சடலம் (82 வயது) கட்டிலில் இருப்பதையும், அதன் அருகே மனநிலை குன்றிய நிலையில் அமர்ந்திருக்கும் அவரது மனைவியான Hasirani Debi (69 வயது) அவர்களையும் மீட்டனர்.

இதுகுறித்து பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், Amar Sanyal இறந்து நான்கு நாட்கள் ஆகியிருக்கலாம், அவரது உடலின் நிறமும் மாறிவிட்டதால் துர்நாற்றம் வந்துள்ளது.

இயற்கையாக மரணத்தை தழுவிய Amar Sanyal-ன் துணைவியாருக்கு இது தெரிந்ததும் அதிர்ச்சியில் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார்.

Amar Sanyal-ன் உடல் முறைப்படி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விசாரணையில் இறந்தவர் முன்னாள் மத்தியரசு ஊழியர் என்றும், அவர்கள் இயல்பாகவே அமைதியான சுபாவம் கொண்ட தம்பதியினர் என்றும், எந்நேரம் வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் என வாழ்ந்து வந்தனர் என்அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்